சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் காவலர்கள் முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் ஜாமீன் மனு தள்ளுபடி

0
153
sathai news

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவலர்கள் முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி விசாரணை செய்த போது, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் சிபிஐ வழக்கு விசாரணையை கையில் எடுத்த நிலையில், முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் காவலில் எடுத்து தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் பின்னர் 2ம் கட்டமாக கைது செய்யப்பட்ட 3 காவலர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இதனிடையே முதலில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களுக்கும் ஜூலை 31 ஆம் தேதி வரை காவல் நீடிக்கப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் முருகன், தாமஸ் பிராங்ளின், முத்துராஜா ஆகியோர் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதில் முருகன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் கைதான காவலர்கள் முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அவர்களது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here