செய்துங்கநல்லூரில் ஏழைக்குடும்பத்திற்கு தையல்மிஷின் – திமுக சார்பில் தூத்துக்குடி எஸ்.ஜோயல் வழங்கினார்

0
163
dmk joel

தூத்துக்குடி:

செய்துங்கநல்லூரில் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வரும் குடும்பத்தினருக்கு திமுக மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் தையல்மிஷின் மற்றும் உதவித்தொகை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட செய்துங்கநல்லூர் வி.கோவில்பத்து சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன்-நம்பிநாச்சியார் தம்பதியர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். வயதான இந்த தம்பதியரின் மகன்களான சின்னத்துரை, முருகன் இருவரும் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு பலவருட காலமாக சிரமான முறையில் வாழ்ந்து வருகின்றனர்.

மிகவும் ஏழ்மை நிலையில், வறுமையான சூழலில் இந்த குடும்பத்தினர் வாழ்ந்து வருவதை அறிந்த திமுக மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் நேரில் சென்று அந்த குடும்பத்தினரை சந்தித்து பேசியதுடன், அக்குடும்பத்தினருக்கு தையல்மிஷின் மற்றும் ரூ.5ஆயிரம் உதவித்தொகை வழங்கினார்.

இதில், கருங்குளம் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் தெற்கு நல்லமுத்து, வடக்கு மகாராஜன், சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் பசுபதி, வசீகரன், கருங்குளம் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் குமார், மாவட்ட பிரதிநிதி ஜோசப்மோகன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி, மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, மாவட்ட மருத்துவர் அணி டாக்டர்.தங்கவேல்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் நவநீதகிருஷ்ணன்,

சுகுமார், மாவட்ட தொண்டர் அணி பிரபாகரன், அவைத்தலைவர் துரைப்பாண்டியன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பரமசிவம், சாத்தான்குளம் ஒன்றிய துணை செயலாளர் பாலமுருகன், ஒன்றிய விவசாய அணி டேவிட்வேதராஜ், திருச்செந்தூர் நகர முன்னாள் செயலாளர் மந்திரமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர்கள் பாலகிருஷ்ணன், உடன்குடி தனபால், ஒன்றிய துணை செயலாளர் பூவலிங்கம், தூத்துக்குடி மாநகர விவசாய அணி அமைப்பாளர் மகேந்திரன்,

புதுக்கோட்டை ஆறுமுகனி, புதுக்கோட்டை பகுதி செயலாளர் பீட்டர், முன்னாள் பகுதி செயலாளர் பென்னி, இளைஞர் அணி நிர்வாகிகள் தனபால், முத்தரசன், ஷேக், வசந்த், விமல்ஜி, ஒன்றிய பிரதிநிதிகள் கண்ணன், சிவன், வல்லநாடு ஊராட்சி செயலாளர்கள் வல்லநாடு வெங்கட், கோவில்பத்து முருகன், சாஸ்தாவிநல்லூர் அந்தோணிஜெயசீலன்,

அரசூர் ராஜபாண்டியன், சீர்காட்சி மகாலிங்கம், செய்துங்கநல்லூர் மதானிஅலிபேக், கால்வாய் நம்பிபாண்டியன், கிளாக்குளம் பெரியசாமி, அந்தோணி, செந்தில்வேல், அரசைகுமார், துரைப்பாண்டியன் உள்ளிட்டவர்கள் முககவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here