அய்யனடைப்பு சித்தர் பீடத்தில் மழை வேண்டி யாகம் !

0
23
WhatsApp Image 2019-06-26 at 12.50.49 PM

தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் சித்தர் பீடத்தில் பிரமாண்டமான ஸ்ரீபிரத்தியங்கிராதேவி-காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் விநாயகர், நவக்கிரகங்கள், குருமகாலிங்கேஸ்வரர், தெட்சிணாமூர்த்தி, லட்சுமி, சரஸ்வதி, முனியசாமி, வீரணார் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். தமிழகத்தில் வரும் நாட்களில் நல்லமழை பெய்து வறட்சி, குடிதண்ணீர் தட்டுப்பாடு நீங்கி பசுமைவளம் சிறக்கவும், உலகமக்கள் நலமாக வாழ்ந்திடவும் வேண்டி சித்தர் பீடத்தில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு மஹாயாகம் நடைபெற்றது.

யாகத்திற்கான வழிபாடுகளை சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குருசீனிவாச சித்தர் தலைமையில் கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் தொடங்கி மஹாயாகமும், ஸ்ரீபிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16வகையான அபிஷேகமும், தீபாரதனையும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here