தேசிய திறனாய்வுத் தேர்வு. உசரத்துக்குடியிருப்பு சவேரியார்புரம் பள்ளி மாணவிகள் வெற்றி

0
59
student news

சாத்தான்குளம் ஜூலை 24:

தேசிய திறனாய்வுத் தேர்வில் உசரத்துக்குடியிருப்பு, சவேரியார்புரம் பள்ளி மாணவிகள் 3பேர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

சாத்தான்குளம் ஒன்றியம் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் மகாநட்டார், மாலதி ஆகியோர் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2019-2020 கல்வியாண்டிற்கான தேசிய திறனாய்வுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற இம்மாணவிகள் ஒவ்வொருருக்கும் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை படிக்கும் 4 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வீதம் மொத்தம் ரூ48000. அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது வெற்றி பெற்ற மாணவிகளை சாத்தான்குளம் வட்டாரக்கல்வி அலுவலர் ஜெயவதி ரெத்னாவதி, பள்ளியின் தலைமையாசிரியர் இம்மானுவேல்ஜோசப், புத்தன்தருவை ஊராட்சித் தலைவர் சுலைகாபீவி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

ஆழ்வார்திருநகரி ஒன்றியம் சவேரியார்புரம் ஆர்.சி. நடுநிலைப் பள்ளி மாணவி மி. சௌமியா, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய்வழி திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இம்மாணவிக்கு பன்னீரெண்டாம் வகுப்பு பயின்று முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ருபாய் உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது. . வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தாளாளர் ரெமிஜியஸ் அடிகளார், வட்டார கல்வி அலுவலர்கள் ரோஸ்லின்,மீனாட்சி, தலைமை ஆசிரியை ஜெஸ்மின் விண்ணரசி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here