தூத்துக்குடியில் காவல்துறையினருக்கு மன அழுத்ததை போக்க, கொரோனாவை எதிர்கொள்ள யோகா பயிற்சி

0
134
thoothkudi s.p news

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் இன்று காவல்துறையினருக்கு மன அழுத்தத்தை போக்குவதற்கும், கொரோனாவை எதிர்கொள்வதற்கும் யோகா பயிற்சி நடைபெற்றது.

இன்று (25.07.2020) காலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மற்றும் 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 50 காவல்துறையினருக்கு மன அழுதத்தை போக்குவதற்கும், கொரோனா எதிர் கொள்வதற்கும் யோகா பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்குப்பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைவருக்கும் கபசுரக்குடிநீர் வழங்கினார்.

அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் பேசுகையில், ‘’தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை ஆளினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்கு நாள் தோறும் காலை ஆயுதப்படை மைதானத்தில் யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிது. இதில் பல தரப்பட்ட ஆசனங்கள் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய மூச்சுப்பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகிறது. காவல்துறையினரும் ஆர்வத்துடன் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். நாள் தோறும் இதை கடைப்பிடித்தால் நல்ல ஆரோக்கியத்துடனும், இந்த கொரோனா ரைவஸ் தொற்று காலத்தில் மன நிம்மதியாக இருக்கலாம் என்பதை தொpந்து கொண்டனர்.

இந்தப்பயிற்சி காவல்துறையினருக்கு ஒவ்வொரு பிரிவாக தினம்தோறும் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் காவல்துறையினருக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்கு மன நல மருத்துவர் மற்றும் அனுபவம் வாய்ந்த காவல்துறை அதிகாரிகளை வைத்து பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்ட வருகிறது. ஏற்கனவே உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்திலும் காவல்துறையினருக்கு இது போன்ற பயிற்சியளிக்கப்பட உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், காவல் ஆய்வாளர்கள் புதுக்கோட்டை சரவண பெருமாள், தாளமுத்துநகர் பிரேமா, புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் விமலா, தெர்மல்நகர் கோகிலா, உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன், உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் தலைமை காவலர் ராஜா ஆகியோh; ஏற்பாடு செய்திருந்தனர். இப்பயிற்சியை யோகாவில் தேர்ச்சி பெற்ற முதல் நிலைக் காவலர் ராஜலிங்கம் சிறப்பான முறையில் கற்றுக்கொடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here