நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி பழைய மாணவர் சங்கத்தி;ன் மரம் நடுவிழா

0
158
Capture

நாசரேத் ஜுன்.26.
நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி பழைய மாணவர் சங்கம் சார்பில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்ற பிரிவு உபசார விழாவையொட்டி மரம் நடு விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஆர்ட் தொழிற்பள்ளியின் தாளாளர் பைசோன் ஞானராஜ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஸ்டீபன் ஆர்ட் தொழிற்பயிற்சி மைய மேலாளர் அகஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு ஆரம்பமாக சபை ஊழியர் ஸ்டான்லி ஜெபம் செய்தார். பழைய மாணவர் சங்க தலைவர் இம்மானுவேல் அருள்தம்பி அனைவரையும் வரவேற்றார்.
தொழிற்பயிற்சி மைய மேலாளர் அகஸ்டின் பள்ளி முதல்வர் ஸ்டீபன் ஆசிரியர் ஜாண்பாலன் தொழிற்பயிற்சி மைய ஊழியர் ஜோசப் ஆகியோர் மாணவர்களின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் வேலைவாய்ப்பிற்கான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார்கள். நிறைவாக பள்ளி தாளாளர் பைசோன் தலைமை உரை ஆற்றினார்.
விழாவின் பிரதான நிகழ்ச்சியாக பள்ளி அருகில் உள்ள சாலையோரத்தில் பள்ளி தாளாளர் பைசோன் ஞானராஜ் முதல்வர் ஸ்டீபன் ஆர்ட் தொழிற்பயிற்சி மைய மேலாளர் அகஸ்டின் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். இதனை பழைய மாணவர் சங்கம் சார்பில் சொட்டு நீர் பாசன முறையில் பராமரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பழைய மாணவர் சங்கத் தலைவர் இம்மானுவேல் அருள்தம்பி செயலர்கள் ஜாண் சாலமோன் இம்மானுவேல் பால்ராஜ் ஜாண் தாமஸ் ஜோசப் ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here