தொட்டிலோவன்பட்டி சோதனைச் சாவடியில் துப்பாக்கிகளுடன் பிடிபட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டதின் கீழ் கைது

0
299
sp news

தூத்துக்குடி மாவட்டம் தொட்டிலோவன்பட்டி சோதனைச் சாவடியில் கள்ளத்துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் பிடிபட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த 16.07.2020 அன்று அதிகாலை தொட்டிலோவன்பட்டி சோதனைச் சாவடியில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஈரோட்டிலிருந்து தச்சநல்லூர் செல்லும் பஜீரோ காரை சோதனை செய்ததில், அந்த காரில் திருநெல்வேலி தச்சநல்லூர் மேலக்கரை, அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் (1) ராஜ்குமார் என்ற குமுளி ராஜ்குமார் (வயது 37). இவருடன் (2) பாளையங்கோட்டை படமகுறிச்சியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வினோத் (26) மற்றும் கொக்கிரக்குளம் மேலநத்தத்தை சேர்ந்த சுரேந்தா (24) ஆகிய மூவர் இருந்தனர்.

இவர்கள் கடந்த 13.07.2020 அன்று இ-பாஸ் பெற்றுக்கொண்டு தச்சநல்லூரிலிருந்து ஈடுரோடு சென்றதும், அங்கிருந்து திரும்பி வருவதும் தெரியவந்தது. சோதனை செய்ததில் ராஜ்குமா என்ற குமுளி ராஜ்குமார். இடுப்பில் கைத்துப்பாக்கி, 5 குண்டுகள் வைத்திருந்ததும், அவருடன் இருந்த மற்ற இருவரிடம் 2 அருவாள் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. பின் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த ஒரு துப்பாக்கி, 5 குண்டுகள், 2 அரிவாள்கள், 5 செல்போன்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கார் ஆகியவற்றை கோவில்பட்டி போலீசார் கைப்பற்றினர்.

3 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மேற்படி 3 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டததின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் ராஜ்குமார் என்ற குமுளி ராஜ்குமாரை கடலூர் சிறையிலும், வினோத் மற்றும் சுரேந்தர் ஆகிய இருவரையும் பாளையங்கோட்டை சிறையிலும் அடைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here