சாத்தான்குளம் அருகே கூலி தொழிலாளி மாயம் – போலீஸ் விசாரணை

0
45
sathankulam news

சாத்தான்குளம், ஜூலை 26-

சாத்தான்குளம் அருகே வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் இளைஞர் மாயமானார்.

சாத்தான்குளம் அருகே உள்ள இரட்டைகிணறு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் க. முருகேசன்(48) கூலி தொழிலாளியான இவரது மனைவி கடந்த ஆண்டு இறந்தார். இவர்களுக்கு ராஜன்(19), வேல்முருகன் உள்பட 3 மகன்கள் உள்ளனர். ராஜன், கூலி வேலைக்கு சென்று வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லவில்லையாம். இதனை அவரது சகோதரர் வேல்முருகன் கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த 19ம்தேதி ராஜன் வீட்டில் இருந்து சென்றவர். எங்கு சென்றார் என தெரியவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை முருகேசன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் பெர்னாட் சேவியர் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here