இ. பாஸ் எடுத்து செல்வோரிடமும் மாவட்ட எல்லை போலீஸார் கெடுபிடி – சாத்தான்குளம் வியாபாரிகள் புகார்

0
156
crime

சாத்தான்குளம், ஜூலை 26:

சாத்தான்குளத்தில் இருந்து வியாபார நிமித்தமாக இ-பாஸ் எடுத்து செல்பவர்களிடம் மாவட்ட எல்லை சோதனை சாவடியில் போலீஸார் கெடுபிடி செய்து அனுமதிக்கப்பட்ட அளவிற்கு நபர்கள் சென்றாலும் அனுமதிக்க மறுக்கின்றனர் என வியாபாரிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் கரோனா நோய் தொற்று காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக வெளியிடங்களுக்கு அடிக்கடி செல்பவர்கள் வசதிக்காக நிரந்தர இ பாஸ் வழங்கப்படுகிறது ..வாகனத்தில் ஓட்டுநர் உட்பட 4 பேர் செல்ல அனுமதிக்கப்படுகிறது.இதுபோல செல்பவர்கள் தாங்கள் செய்யும் தொழில் சம்பந்தமான உரிய ஆவணங்கள் மற்றும் தேவையான விவரங்களை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். தகுதி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இ பாஸ் வழங்கப்படுகிறது.

சாத்தான்குளத்தில் இருந்து விருதுநகர்,தேனி ,மதுரைக்கு வியாபார விஷயமாக வாரம்தோறும் பலர் சென்று வந்தனர்..தற்பொழுது பேருந்து போக்குவரத்து இல்லாததால் அவர்கள் தங்கள் வியாபாரம் விஷயமாக செல்வதற்கு இரண்டு அல்லது மூன்று வியாபாரிகள் சேர்ந்து அவர்களில் ஒருவருடைய வாகனத்திற்கு அனுமதி பெற்று வாரம்தோறும் குறிப்பிட்ட நாட்களில் சென்று திரும்புகின்றனர். இவர்களுக்கு தொழில் அடிப்படையில் இ.பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஓட்டுநர் உள்ளிட்ட நான்கு பேர் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது . சாத்தான்குளத்தில் இருந்து வாரம் தோறும் சென்று வரும் வியாபாரிகள் ஒவ்வொரு முறையும் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட எல்லையிலுள்ள தூத்துக்குடி மாவட்ட சோதனை சாவடியில் இ- பாஸ் அனுமதியுடன் செல்லும் வியாபாரிகளிடம் போலீஸார் கெடுபிடி செய்கிறார்களாம்.

ஓட்டுநருடன் ஒரு நபர் மட்டுமே செல்ல வேண்டும் என நிற்பந்திக்கின்றனர்.ஒவ்வொருமறையும் அவர்களிடம் இ.பாஸ் ஆர்டரில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை கூறி செல்ல வேண்டியுள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதனால் காலதாமதம் ஏற்படுவதாகவும் .வேறு எந்த மாவட்ட எல்கையிலும் இதுபோல போலீஸார் கெடுபிடி செய்யவிலையெனவும் தெரிவிக்கின்றனர்.

எனவே தூத்துக்குடி மாவட்ட எல்கையிலுள்ள போலீஸாருக்கு ஒவ்வொரு வாகனத்திற்கும் அனுமதிக்கப்பட்ட நபர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை உரிய முறையில் உயரதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் எனவும், இதன் மூலம் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என சாத்தான்குளம் பகுதியில் இருந்து மதுரை பகுதியில் வியாபாரம் நிமித்தமாக செல்லும் வியாபாரிகள் கேட்டுக் கொள்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here