கயத்தார் அருகே முயல் வேட்டை – 4 பேருக்கு தலா 10ஆயிரம் அபராதம்

0
181
kovilpatti

கயத்தார் அருகே முயல் வேட்டையில் ஈடுபட முயன்ற 4 பேருக்கு தலா 10ஆயிரம் அபராதம் விதித்த வனத்துறையினர்.

கோவில்பட்டி வனச்சரக அலுவலர் சிவராம் மற்றும் கயத்தார் வனச்சரக அலுவலர் ஆனந்த் ஆகியோர் தலைமையில் வனவர் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் கருத்தப்பாண்டி , விஜயபாண்டி மகேந்திரன் ஆகியோர் வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கயத்தார் தாலுகா வெள்ளாளங்கோட்டை ‌ கிராமத்தில் உள்ள கண்மாய் பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் இவர்களை பார்த்ததும் தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனால் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் எஸ்.சிதம்பரபுரத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் ராஜாராம், மூவிருந்தாளியைச் சேர்ந்த தேன்ராஜ் என்பவரது மகன் ரங்கராஜ், புது அப்பநேரியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் முனீஸ்வரன், கோவில்பட்டி சேர்ந்த சங்கிலி பாண்டி என்பவரது மகன் விக்னேஷ் என்பது தெரியவந்தது.

மேலும் நான்குபேரும் காட்டு முயலை வேட்டையாட முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் , நான்கு பேருக்கும் தலா 10ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here