திருச்செந்தூர் மழைநீர் வடிகால் ஓடையை தூர்வாரும் பணியை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆய்வு

0
101
mla anitha

திருச்செந்தூர், ஜூலை 27

திருச்செந்தூர் மழைநீர் வடிகால் ஓடையை தூர்வாரும் பணியை தி.மு.க., தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர் அருகே எல்லப்பநாயக்கன்குளம் உபரிநீர் வடிகால் ஆலந்தலையிலிருந்து துவங்கி ஜீவாநகர் பகுதியில் கடலில் கலக்கிறது. இந்த வடிகால் ஆலந்தலை கணேசபுரம், தோப்பூர் வழியாக திருச்செந்தூர் மையபகுதியை தொட்டு கடலில் சென்று சேருகிறது. சுமார் 4 கி.மீ.,தூரம் நீளமும், 20 அடிக்கு மேல் அகலமும் கொண்டது. அதாவது எல்லநாயக்கன்குளம் மற்றும் ஆவுடையார்குளம் நிரம்பி மறுகால் பாயும் போது, மழைநீர் இந்த வடிகால் வழியாக தான் கடலில் கலக்கும். இந்த மறுகால் வடிகால் சுமார் 50 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் மேடு பள்ளங்களாக முட்புதர் சூழ்ந்து காணப்படுகிறது.

இதனால் எல்லநாயக்கன்குளம் மற்றும் ஆவடையார்குளம் உபரிநீர் மறுகால் பாயும் போது, பல நேரங்களில் ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறது. இந்த வடிகாலை யார் பராமரிப்பது என்பது பொதுப்பணித்துறையினருக்கும் டவுன் பஞ்சாயத்துக்கும் பெரிய பனிப்போர் நடந்து வருகிறது. தற்போது மழைகாலம் துவங்க உள்ள நிலையில் மறுகால் வடிகாலை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான அனிதாராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து பொதுப்பணி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகாலை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளனர். திருச்செந்தூர் அருகே தோப்பூர் விலக்கு ரோட்டிலிருந்து தோப்பூர் வழியாக முத்தாரம்மன் கோயில் தெரு வரை தூர்வாரும் பணி நடக்கிறது. இதனை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது தி.மு.க.., ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள் சுடலை, முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், தோப்பூர் சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்செல்வன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர்ரொட்ரிகோ, முன்னாள் நகர செயலாளர் ராஜமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here