கந்த சஷ்டி கவசத்தை அவதூறு செய்த கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகளை தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வேண்டும்

0
55

திருச்செந்தூர், ஜூலை 27

கந்த சஷ்டி கவசத்தை அவதூறு செய்த கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என முருகபக்தர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் சார்பில ஆர்.டி.ஒ., தனப்பிரியாவிடம் புகார் அளிக்கப்பட்டது.

தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை பற்றி சமூக வலைதளமான கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் அவதூறு செய்து கருத்து வெளியானது. இதற்கு முருகபக்தர்கள் மற்றும் பா.ஜ.கவினர், இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். முருகபக்தர்கள் கடும் வேதனை அடைந்தனர். இதனை தொடர்ந்து கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை தமிழக போசார் கைது செய்தனர். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கறுப்பர் கூட்டம் நிர்வாகிகளை கைது செய்யப்பட்டனர். யூ டியூப்பிலிருந்து சர்ச்சைக்குரிய விமர்சனம் நீக்கப்பட்டது. அதே கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலிறுத்தி திருச்செந்தூரில் முருகபக்தர்கள், அனைத்து சமுதாய தலைவர்கள், பா.ஜ.க.வினர் திருச்செந்தூர் ஆர்.டி.ஒ., தனப்பிரியாவிடம் நேரில் மனு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் குமாரபுரம், சுப்பிரமணியபுரம், ஊர்த்தலைவர்கள், வியாபாரிகள், பா.ஜ.க., மற்றும் இந்துமுன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here