குரும்பூரில் புதிய சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்

0
197
kurumbur vivasaigal

நாசரேத், ஜூலை 28- விவசாய சட்டங்களை எதிர்த்து குரும்பூரில் விவசாய சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

மின்சார திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் அவசர திருத்த சட்டம், வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விலை உத்திரவாதம், வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி குரும்பூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

ஆழ்வை., கிழக்கு ஒன்றிய செயலாளர் நவன்குமார் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமையா, ஏரல் தாலுகா செயலாளர் சுப்புத்துரை, தலைவர் வெள்ளச்சாமி, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் வக்கீல் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மின்கட்டண உயர்வை கண்டித்து விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here