நாசரேத் அருகே துப்புரவு பணியாளர், ஜேசிபி டிரைவர் தற்கொலை

0
68
sucid

நாசரேத், ஜூலை 28

நாசரேத் அருகே துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்டனர்.இதுகுறித்து நாசரேத் போலீஸீல்கூறப்படுவதாவது.

நாசரேத் அருகே உள்ள உடையார்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராமச்சந்திரன் (30). இவருக்கு மனைவி முருகலட்சுமி (28) , மகள் சரண்யா (10), மகன் கௌதம் (8) ஆகியோர் உள்ளனர். இவர் அதே பகுதியில் துப்பரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு குடி பழக்கம் இருந்ததால் வீட்டுக்கு தினமும் மது அருந்தி வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த சில நாட் களுக்கு முன்பு இதேபோல் மது அருந்தி வந்து மனைவியிடம் தகராறு செய்ததில் ஏற்பட்ட பிரச்னையில் மனைவி இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு அவரது தாய் வீடான கூட்டாம்புளிக்கு சென்று விட்டார். அதன்பிறகு ராமச்சந்திரன் , அவரை மீண்டும் குடும்ப நடத்திட வருமாறு அழைத்துள்ளார் . அவர் வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த ராமச்சந்திரன் மதுவில் விஷம் அருந்தி வீட்டில் படுத்து விட்டார். மறுநாள் அவரது தாய் லீலாவதிக்கு விஷம் அருந்தியது தெரியவந்தது. உடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்து அவரது தாயார் லீலாவதி நாசரேத் போலீஸில்புகார் அளித்தார் நாசரேத் போலீஸ் ஏட்டு ரோஸ்லீன் வழக்குபதிவுசெய்தார். இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி விசாரனை செய்து வருகிறார்.

இதேபோல் நாசரேத் அருகே ஜேசிபி டிரைவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நாசரேத் போலீஸில் கூறப்படுவதாவது.

நாசரேத் அருகே உள்ள உடையார்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் சரவணன் (28). இவர் அதே பகுதியில் ஜேசிபி டிரைவர் இருந்து வந்தார். திருமணமாகாத இவருக்கு அடிக்கடி தீராத வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது . இதனால் அவதி அடைந்து வந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். உடனே அவரது தாயார் சந்திரா (60) நாசரேத் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தார். நாசரேத் போலீஸார் அவரது உடலை கைப்பற்றி நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நாசரேத் போலீஸ் ஏட்டு ரோஸ்லீன் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here