மெஞ்ஞானபுரம் அருகே வழக்குரைஞர் மீது தாக்குதல் – தூத்துக்குடி தனிப்பிரிவு எஸ்.ஐ உள்ளிட்ட 5பேர் மீது வழக்கு

0
206
fir news

சாத்தான்குளம், ஜூலை 29-

மெஞ்ஞானபுரம் அருகே உயர்நீதிமன்ற வழக்குரைஞர் மால்முரளியை தாக்கியதாக தூத்துக்குடி தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5பேர் மீது 11 சட்டபிரிவுகளின் கீழ் மெஞ்ஞானபுரம் போலீஸார் வழக்குபதிந்துள்ளனர்.

உடன்குடி சந்தையடியூர் பண்டாரவிளை தெருவைச் சேர்ந்தவர் பால்முரளி . இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்குரைஞராக உள்ளார். இவர் கடந்த மே மாதம் 11ஆம்தேதி அவரது மனைவி ஊரான மெஞ்ஞானபுரம் அருகே உள்ள லட்சுமிபுரம் மருதூர்கரைக்கு இரு சக்கர வாகனத்தில் மளிகை பொருள்கள் வாங்கி கொண்டு சென்றாராம். சித்தவிளை அருகில் சென்ற போது தூத்துக்குடி தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ராஜபிரபு ஒரு காரில் வந்து அவரை வழிமறித்து தகாதவார்த்தையில் பேசினாராம். உடன் அவர் வழக்குரைஞர் என தெரிவித்தாராம். ஆனால் அதனை பொருப்படுத்தாமல் தகாதவார்த்தையில் பேசி அவரை தாக்கினாராம்.

இதையடுத்து காரில் இருந்த மற்ற 4பேர்களும் வந்து அவரை தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்களாம். இதில் காயமடைந்த மால்முரளி உறவினர் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் வழக்குபதிவு செய்யப்படவில்லையாம். இதனால் சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட்டார். இவரது இவரது வழக்கு விசாரித்த சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் , விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் மெஞ்ஞானபுரம் உதவி ஆய்வாளர் அமலோற்பவம், வழக்குரைஞரை தாக்கியதாக தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ராஜபிரபு உள்ளிட்ட 5பேர்கள் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 11 சட்ட பிரிவின் கீழ் வழக்குபதிந்துள்ளார். காவல் ஆய்வாளர் (பொறுப்பு ) ஹரிகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here