தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றிபெற்ற கோவில்பட்டி நாடார் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

0
74
kvp school news

ஆண்டுதோறும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அளவிலான திறனாய்வு தேர்வுகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூபாய் நாற்பத்தி எட்டு ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.

இத்தேர்வில் கோவில்பட்டி நாடார் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஜெனிபர், முத்துக்கார்த்திகா, இருளப்பன், நாகசெல்வம், சாமுவேல்ராஜா, விஜய்அரவிந்த், பானுசூர்யா, மகாலட்சுமி, பவித்ரா ஆகிய 9 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் பழனிச்செல்வம், பள்ளி செயலாளர் கண்ணன், பொருளாளர் அய்யப்பன், உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, ரவிச்சந்திரன், பொன்ராமலிங்கம், ராஜாஅமரேந்திரன், மணிக்கொடி, ராமசாமி, தலைமை ஆசிரியை செல்வி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here