தட்டார்மடத்தில் கொலை, கொள்ளை வழக்கில் 10 ஆண்டுகள் தேடப்பட்டு வந்த கணவன், மனைவி கைது

0
76
arrust

தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2010ம் ஆண்டில் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கணவன், மனைவி ஆகியோர் மீது நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

கடந்த 2010ம் ஆண்டு தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சவேரியார்புரத்தைச் சேர்ந்த அந்தோணி சவரிமுத்து மகள் சகாயலூர்து (வயது 21) என்பவரை கொலை செய்து சுமார் 4 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் மணியாச்சி பாறைக்குட்டத்தைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் முருகன் என்ற இசக்கி முத்து (வயது 45) மற்றும் அவரது மனைவி பேச்சித்தாய் (வயது 40) ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பினர். அவர்கள் இருவரையும் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக தேடிவந்த நிலையில் இன்று (29.07.2020) வரை தலைமறைவாக இருந்து வந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையில், காவலர்கள் பிரெடெக் ராஜன், காசி, மணிகண்டன் மற்றும் ரகு ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று காலை விருதுநகர் மாவட்டம், நத்தம்பட்டியில் முருகன் என்ற இசக்கி முத்து (வயது 45) மற்றும் அவரது மனைவி பேச்சித்தாய் (வயது 40) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மேற்படி கணவன் மற்றும் மனைவி ஆகியோரை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here