சுற்றுச்சூழல் குறித்து நடிகர் கார்த்தி அறிக்கைக்கு ரியாக்‌ஷன்..

0
283
actor karthi news

‘படப்பிடிப்பு இல்லை; வீட்டில் இருக்கிறீர்கள் என்பதற்காக, சம்பந்தம் இல்லாத விவகாரங்களில் தலையிட துவங்கி விட்டீர்களா…’ என, கேட்கத் துாண்டும் வகையில், நடிகர் கார்த்தி அறிக்கை:

சுற்றுச்சூழல் தாக்கம் சட்ட வரைவில் பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம் என்கிற ஒரு சரத்தே, நம் உள்ளத்தில் மிகப் பெரிய அவநம்பிக்கையையும், அச்சத்தையும் உருவாக்குகிறது.

‘தீவிர அரசியலில் இல்லாத நீங்கள், ஸ்டாலினை பாராட்டி அடிக்கடி அறிக்கை விடுத்திருப்பது, ‘நான் இருக்கிறேன்’ என்பதை மறைமுகமாக சொல்லும் வகையில் தான் உள்ளது…’ என, கூறத் தோன்றும் வகையில், மறைந்த அன்பழகன் மகன் அன்புசெல்வன் அறிக்கை:

மருத்துவக் கல்வி இட ஒதுக்கீடு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் அயராத உழைப்பும், விடாத சட்ட முயற்சியும் தான் காரணம்.’தெரிந்த விவகாரங்களுக்கு குரல் கொடுங்க சார்…

‘அவர்கள் தான், தங்கள் பங்குக்கு, தினமும், மக்களுக்கு பீதியை ஏற்படுத்தி வருகின்றனரே; அது போதாதா…’ என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேட்டி:

தமிழக மக்களுக்கு, நிவாரண நிதி வழங்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் சேர்ந்து, தீர்மானம் நிறைவேற்றுகின்றன. ஆனால், யாரும் கேட்காததற்கு முன், நிவாரண நிதியை, தமிழக மக்களுக்கு முதல்வர் வழங்கினார். தீர்மானம் நிறைவேற்றுவோர், மக்களுக்கு என்ன செய்தனர் என்று, சிந்தித்து பார்க்க வேண்டும்.

‘மத்திய அரசு எந்த சட்டம் கொண்டு வந்தாலும் எதிர்க்கலாம் என்ற, ‘நல்ல’ எண்ணத்தின் காரணமாக இருக்கும்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி:

சுற்றுச்சூழல் தாக்கம் அறிக்கை தொடர்பான மத்திய அரசின் வரைவு மசோதாவில், தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம், மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு அதிகாரம் கோரியவர்கள், இப்போது மறுப்பது ஏன்?

‘நீங்கள் சொல்வதுபடி, உயர்கல்வி படிப்பது குற்றமா என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. எனினும், விசாரித்தால் தான் உண்மை தெரிய வரும்…’ என, பதிலளிக்கத் துாண்டும் வகையில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை:

முன் அனுமதியின்றி, உயர்கல்வி படித்து விட்டதாகக் கூறி, 5,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு, தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில், கல்வித் துறையே நடவடிக்கை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here