ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுகிறார் : லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதா புகார்

0
386
vanitha - laksmi ramakirishnan

வனிதாவிஜயகுமார் செய்து கொண்ட 3வது திருமணம் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்தார். இதனால் இருவரும் யூடியூப் சேனல் ஒன்றில் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் லட்சுமி ராமகிருஷ்னன் பற்றி தரக்குறைவாக வனிதா பேசினார். இதனால் வனிதாவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பில் உள்ளார் லட்சுமிராமகிஷ்ணன். அந்த நோட்டீசை தனது டுவிட்டரில் வெளியிட்டு வனிதா கூறியிருப்பதாவது:

ஒரு குடும்பத்திற்கு உதவி செய்வது போன்றும்,தேவையில்லாமல் என் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டும் போலி நீதிபதியாக இருக்கவும் முயற்சி செய்யும் நல்ல மனசுள்ள சமூக ஆர்வலர் (லட்சுமி ராமகிருஷ்ணன்) தன் வழக்கறிஞர் மூலம் ரூ.1.25 கோடி கேட்டு என்னை மிரட்டுவதை பாருங்கள்.அப்பாவிகளின் ரத்தத்தை குடிக்கிறார்.

இது தொடர்பாக என் வழக்கறிஞர் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளார். இது ஒன்றும் நீதிமன்ற ஆவணம் இல்லை. அவரின் வழக்கறிஞர் பணம் கேட்டு அனுப்பியதுதான். எல்லாவற்றையும் சட்டப்படி சந்திப்பேன் என்கிறார் வனிதா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here