தூத்துக்குடியில் கொரோனா வார்டில் இன்று 2 பேர் உயிரிழப்பு

0
200
corona death

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2பேர் இன்று காலை உயிரிழந்தனர்.

இதேபோல் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் நேற்று ஒரே நாளில் பரிதாபமாக இறந்தனர். மேலும், மாவட்டத்தில் 316 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

மேலும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 124 ஆக உயர்ந்திருக்கிறது என்கிற தகவல் சற்று ஆறுதலை தருகிறது. இந்நிலையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 2 ஆண்கள் இன்று காலை உயிரிழந்து விட்டனர். அவர்களது உடல்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிகளின் படி அடக்கம் செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here