5 மாதங்கள் 100 படங்கள் வெளியாக வில்லை – ஏக்கத்துடன் சினிமாத்துறையினர்

0
410
cinema news

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. நான்கு மாதங்களை கடந்துவிட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மத்தியரசு அறிவித்த அறிவிப்பில் தியேட்டர்கள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு வெளியானது. இதானால் எதிர்பார்ப்பில் இருந்து வந்த சினிமா துறையினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.

சீனாவில் 30 சதவீதம் அனுமதியுடன் கடும் கட்டுப்பாடுகளோடு தியேட்டர்கள் திறந்திருப்பதுபோல் நமது நாட்டிலும் தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைக்குமென சினிமா துறையினர் எதிர்பார்த்தனர்.

ஆகஸ்ட் முழுவதையும் கணக்கிட்டால் முழுமையாக ஐந்து மாதங்கள் தியேட்டர்கள் இயங்கவில்லை என்றாகிவிடுகிறது. இதுவரை சுமார் 100 படங்களின் வெளியீடு பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நடுத்தர மற்றும் சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து வைத்துள்ள தயாரிப்பாளர்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here