கோவில்பட்டியில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

0
16
WhatsApp Image 2019-06-27 at 12.40.19 PM

சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பேரணியை கோட்ட கலால் அலுவலர் பா.செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தார். பேரணியில் நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி சென்றனர். மேலும், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

பயணியர் விடுதி முன்பு தொடங்கிய பேரணி, முக்கிய சாலைகள் வழியாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. பேரணியில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் குமரவேல், கலால் ஆய்வாளர் வி.நேசமணி, நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here