சாத்தான்குளத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி சத்து மாத்திரை விநியோகம்

0
24
sathankulam

சாத்தான்குளம், ஜூலை 30:

சாத்தான்குளத்தில் 100 வீடுகளுக்கு கரோனா நோய் எதிர்ப்பு சக்தி சத்து மாத்திரை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.சாத்தான்குளம் சமூக ஆர்வலரும், அரிமா சங்க பட்டயதலைவருமான ஆர். ஜெயபிரகாஷ் , முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கரோனா எதிர்ப்பு சக்தி சத்து மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை ஆர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்து சத்து மாத்திரை வழங்கி தொடங்கி வைத்தார். இதில் வீரகுமாரபிள்ளை தெரு, தெற்கு ரதவீதி ஆகிய தெருக்களில் ஒரு குடும்பத்திற்கு 20 மாத்திரை வீதம் 100 வீடுகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ் உள்ளிட்ட செவிலியர்கள், மஸ்தூர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here