கயத்தாறு அருகே விவசாயி வெட்டிக் கொலை

0
19
WhatsApp Image 2019-06-27 at 12.40.52 PM

கயத்தாறு அருகே விவசாயியை வெட்டிக் கொன்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கயத்தாறையடுத்த அய்யனார்ஊத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் அண்ணாமலை(40). இவர் மற்றும் இவரது மனைவி மாசாணம், மகள் முத்துலட்சுமி ஆகிய மூவரும் ஊருக்கு அருகே தென்பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான தோப்பில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த அண்ணாமலையின் உறவினர் உடையார் தேங்காயை பறித்தாராம். அப்போது அண்ணாமலைக்கும், உடையாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அதையடுத்து உடையார் அங்கிருந்து சென்றுவிட்டாராம்.
பின்னர் அண்ணாமலை தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தாராம். அண்ணாமலை ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் தோப்பில் இருந்து சிறிது தூரத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே உடையார் ஓட்டிக் கொண்டு வந்த பைக்கை மோட்டார் சைக்கிள் மீது மோதவிட்டு தகராறு செய்தாராம்.
அப்போது தகராறு முற்றிய நிலையில், உடையார் மற்றும் அவருடன் பைக்கில் வந்த கோதண்டராமன் ஆகிய இருவரும் அண்ணாமலையை அரிவாளால் தாக்கினார்களாம். அதை தடுக்கச் சென்ற அவரது மகள் முத்துலட்சுமிக்கும் காயம் ஏற்பட்டது. உடையாரும், கோதண்டராமனும் தப்பியோடிவிட்டனர்.
பலத்த காயமடைந்த அண்ணாமலை சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் ஆவுடையப்பன் மற்றும் போலீஸார் சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த முத்துலட்சுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here