தூத்துக்குடி பக்கிள் ஒடை பகுதியில் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம் – சாலை விரிவாக்க பணிக்காக ஏற்பாடு

0
71
kudusaigal akatram

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தபால் தந்தி காலனி பகுதியில் உள்ள பக்கிள் ஓடையின் இருபுறமும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை விரிவாக்கம் , மழை நீர் தேங்காதவண்ணம் கழிவு நீரோடைகள் அமைக்கப்பட்டு பக்கிள் ஓடையை சென்றடையும் வகையில் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் பக்கிள் ஓடை பகுதியில் சுமார் 15 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மாநகராட்சி பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்தகாரர்கள் வீடுகளை காலி செய்யவும், சில வீடுகளை அகற்றியும் உள்ளனர். தற்போது அகற்றப்படும் குடிசை வீடுகளில் வசித்து வருபவர்கள் வேறு வழியில்லாமல் நிர்கதியாக நிற்பதாக சொல்லப்படுகிறது. அகற்றப்பட்ட குடிசைவாசிகளின் நிலையை விசாரித்து அவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here