கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்து – அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

0
285
minister vijayabaskar

குரோட்டன் சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்க டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் அதனால் ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்வர் தலைமையில் குழு ஒன்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையில் நோயின் தன்மைக்கு ஏற்ப ஆங்கில முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இந்திய மருத்துவ முறைகளான சித்தா மற்றும் ஆயுர்வேத உள்ளிட்ட சிகிச்சைகளை அளிப்பதற்கு ஆரோக்கியம் திட்டத்தினை ஏப்ரல் 23 முதல்வர் துவக்கி வைத்தார்.

இதையடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. சிறு வில்வம், திப்பிலிவேர், தலைமூலம் உள்ளிட்ட 17 மூலிகைகள் அடங்கிய ஆயுர்வேத மருந்தான இந்துகாந்த கசாயம், கடுக்காய் உள்ளிட்ட 27 பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் அகஸ்திய ரசாயணம் மற்றும் வெண்பூசணி உள்ளிட்ட 11 பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கூஷ்மாண்ட ரசாயணம் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

இவற்றை காலை மற்றும் இரவு என இருவேளை சாப்பிட டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம் மருந்துகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஆகியவற்றில் செயல்பட்டுவரும் ஆயுர்வேத சிகிச்சை பிரிவுகளில் எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் டாக்டரின் ஆலோசனைப்படி அருந்தவேண்டும். ஏற்கனவே தமிழக அரசால் சித்தா மருந்தான கபசுர குடிநீர் இன் ஓமியோபதி மருந்தான ஆர்செனிக்ஆல்பம் 30 சிம் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் வழங்குவது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கையால் தமிழகத்தில் குறைவான தடுப்பு மற்றும் சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here