இரவு 7 மணி வரை மட்டும் கடைகள் திறக்க அனுமதி : தூத்துக்குடி டி.எஸ்.பி., தகவல்

0
16
police news

தூத்துக்குடியில் அரசு அறிவித்தபடி இரவு 7 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக டிஎஸ்பி கணேஷ் தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய 6 ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் ஆகஸ்ட் மாதத்தில் கடைகளை காலை 6 மணி முதல் இரவு மணி திறக்கலாம் என்றும் ஹோட்டல்களில் இரவு 7 மணி வரை அமர்ந்து உணவருந்தலாம், 7 மணிக்கு பிறகு பார்சல்கள் வழங்கலாம் என தமிழக முதல்வர் தெரிவித்தார். இதற்கு முன்பு இரவு 8 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் (ஆக 1 ம் தேதி) இரவு 7 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளை அடைக்கும்படி போலீசார் அறிவுறுத்தினார்கள்.

இதனால் கடைகளை அடைக்கும் நேரம் குறித்து வியாபாரிகள் குழப்பமடைந்தனர். இது குறித்து நமது செய்தியாளர், டவுன் டிஎஸ்பி கணேஷை தொடர்பு கொண்டு கேட்ட போது, ஊரடங்கை பொறுத்த வரை அரசு அறிவித்துள்ள வழிமுறைப்படி செயல்பட்டு வருகிறோம். இரவு 7 மணிக்கு மேல் திறந்திருந்த சில கடைகளை அடைக்கும்படி அறிவுறுத்தினோம். மேலும் வியாபாரிகளிடம் கெடுபிடி செய்ய வேண்டாம் என போலீசாரிடம் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here