காமராஜர் சிலையை இடமாற்றம் செய்ய கூடாது : பனங்காட்டு மக்கள் கழகம் வேண்டுகோள்

0
29
kamarajar

தூத்துக்குடி விஇ ரோட்டிலுள்ள காமராஜர் சிலையை இடமாற்றம் செய்யும் முயற்சியை நிறுத்த வேண்டுமென மாநகராட்சிக்கு பனங்காட்டு மக்கள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து பனங்காட்டு மக்கள் கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அற்புதராஜ் வெளியிட்ட செய்திகுறிப்பில், தூத்துக்குடி விஇ ரோட்டிலுள்ள முன்னாள் முதல்வர் காமராஜர் சிலையை மார்க்கெட் நுழைவு வாயிலில் தெற்கு மேற்புறத்தில் மாற்றி வைக்க வேண்டுமென தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். ஆணையர் இந்த செயல் காமராஜர் மீது பற்று கொண்ட லட்சகணக்கானோரின் மனதை புண்படுத்துவது போல் உள்ளது.

தமிழகத்திற்கு ஏராளமான நன்மைகளை செய்த அவரது சிலையை இடமாற்றம் செய்வது காமராஜர் புகழை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் இருக்குமோ என சந்தேகம் எழுகிறது. எனவே காமராஜர் சிலையை அகற்றும் முயற்சியை நிறுத்த வேண்டும். அகற்ற முயற்சித்தால் அறவழியில் போராடுவதை தவிர வேறு வழியில்லை. எனவே காமராஜர் சிலையை அகற்றும் முயற்சியை நிறுத்த வேண்டுமென மாநகராட்சியை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here