தூத்துக்குடியில் கரோனாவால் கல்வித்துறை அதிகாரி உட்பட 5பேர் பலி

0
26
corona news

தூத்துக்குடியில் கரோனா வைரஸ் பாதிப்பால் கல்வித்துறை அதிகாரி உட்பட 5பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 284 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 7 ஆயிரத்தை தாண்டியது. அதுபோல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 846 ஆக உயர்ந்து உள்ளது. 2 ஆயிரத்து 214 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 47பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கரோனாவால் இன்று ஒரே நாளில் 5பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி கல்வித்துறை துணை ஆய்வாளர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, மற்றும் ஏரல் ஆகிய பகுதிகளை்ச சேர்ந்த தலா ஒருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த 2பேர் என மொத்தம 5பேர் இன்று உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here