தமிழக அரசும் இ – பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் – தூத்துக்குடி ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் கோரிக்கை

0
119
motar news

தூத்துக்குடி மாவட்ட அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் கூட்டமைப்பு சார்பாக இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.‌‌ அந்த மனுவில் மத்திய அரசு E pass முறையை தளர்வு அளித்திருக்கிறது. அதுபோல் தமிழக அரசும் இ – பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த அவர்கள், E pass முறையில் முறைகேடுகள் நடக்கிறத எனவும் தகவல் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் எம்.ஜெயராஜ், ஆர்.ரவி,பட்டாணி, பொன்ராஜ், கார்த்திக்ராஜா உள்ளிட்டோர் கொடுத்திருக்கும் மனுவில் கூறியிருப்பதாவது :-

’’கொரோனா கிருமி நோய் தொற்று தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நோய் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 2020 மார்ச் 24 ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. அதன் நீட்ச்சி இன்று வரை தொடர்ந்து அமலில் உள்ளது. இதனால் பெரும்பான்மையான மக்கள் வாழ்வாதரத்தை இழந்து நிற்கின்றனர்.

இந்த ஊரடங்கு நீட்ச்சினால் இன்று வரை வாடகை வாகனம் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், மிகவும் பொருளாதார நெருக்கடியால் பாதிப்புக்குள்ளாகி தங்கள் வாழ்வாதரத்தை இழந்து மீளா துயரத்தில் வறுமையின் பிடியில் சிக்கி வாழ்ந்து வருகிறோம். இந்த பொருளாதார நெருக்கடியை தாங்கி கொள்ள முடியாமல் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். என்பதை மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்து கொள்கிறோம்.

இவர்களுக்கு அரசு செய்த சில உதவிகளும், தன்னார்வலர்கள், அமைப்புகளும் செய்த உதவிகளும் சிறு ஆறுதலை அளிக்கும் நிலையில் உள்ளது. எனினும் இவர்களின் வாழ்வாதரத்தை மீட்க் மக்கள் பாதை இயக்கம் சார்பாக வைக்கும் கோரிக்கைகள் :-

வாடகை உரிமையாளர் மற்றும் ஓட்டுனர்கள் அரசுக்கு செலுத்திய சாலைவரிகள், காப்பீட்டு தொகை வரி, வாகன புதுப்பித்தல் கட்டணம், சுங்கச்சாவடி கட்டணங்கள், அரசுத்துறை மிகப்பெரிய அளவில் வருவாய் பெற்று வந்தது. அவர்களின் நலன் கருதி மீட்டு அவர்களின் பொருளாதர பிரச்சனைகளை சீர் செய்து வாழ்வாதரத்தை உயர்த்தி தருவது அரசின் கடமையாகும்.

தமிழக வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு சார்பில் கொரோண ஊரடங்கு உத்தரவு காலங்களில் ₹1000/- மற்றும் மளிகை பொருட்கள் விதி எண் 110 பயன்படுத்தி 83,500 ஓட்டுநர்கள் தமிழகத்தில் பலன் பெற்றுள்ளனர் எனினும் தமிழகத்தில் ஆட்டோ, டாக்ஸி, சுற்றுலா வாகனங்கள், மிதமான கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகன ஓட்டுனர்கள் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவு காலங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே பலன் பெற்றுள்ளனர்.

1 தமிழக வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு ₹15000/- வணிக வாகன ஓட்டுனர் உரிமத்தை அடிப்படையாகக்கொண்டு நிவாரணம் வழங்கிட முன் வர வேண்டும்.

2 வாடகை வாகன உரிமையாளர்களுக்கு வாகனத்திற்கான கடன் மார்ச் மாதம் முதல் டிசம்பர் 2020 வரை கால அவகாசம் நீட்டிப்பது மற்றும் கூட்டு வட்டியை அறவே ரத்து செய்து கொடுக்க வேண்டும்.

3 வாடகை வாகன உரிமையாளர்களுக்கு வாகனம் ஓடுதல் அனுமதியின் ( Permit அடிப்படையில் ₹50000 முதல் ₹2 லட்சம் வரை வட்டியில்லா கடன் உதவி வழங்க வேண்டும். வாகனத்தை இயக்குவதற்கான தடை உத்தரவு காலங்களில் பழுதான வாகனங்களை சீர் செய்யவும் தொழில் மூலதனமாக செயல்படுத்துவதற்காக.

4 பிரதம மந்திரி முத்ரா திட்டம் (புதிய தொழிலுக்காக) அல்லது அதன் வடிவத்தை திருத்தம் செய்து வாகன உரிமையாளர்கள் பலன் பெற மத்திய மாநில அரசுகள் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5 மார்ச் மாதம் முதல் இயக்கப்படாத வாடகை வாகனங்களுக்கான சாலை வரியை ரத்து செய்தல் மேலும் மக்கள் பயணிக்கும் வாடகை வாகனங்களுக்கு ஓராண்டு சாலை வரி, வாகன புதுப்பிப்பு ரத்து செய்ய வேண்டும்.

6 ஓராண்டிற்கு மூன்றாம் நபர் காப்பீடு இலவசமாக வாடகை வாகனங்களுக்கு வழங்கப்படவேண்டும், மேலும் ஓட்டுனர்களுக்கு கொரோண தொற்று நோய்க்கான பிரத்தியேக காப்பீடு வழங்க வேண்டும்’’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here