நூலகத்துக்கு என்றே ஒரு பல்கலைக்கழகம் நிறுவ வேண்டும் – கு.ஞானசம்பந்தன் பேச்சு

0
89
kvp news

அதன் முதலாம் நாளான 30.07.2020, வியாழக்கிழமை அன்று நடைபெற்ற இணையவழி வாசகர் மாநாட்டிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் கே.காளிதாஸ் முருகவேல் தலைமை வகித்தார், நூலகர் முனைவர் கே.கருணை ராகவன் வரவேற்றார், முதலாமாண்டு மாணவி செல்வி. எஸ். சுஜி இணையவழி வாசகர் மாநாட்டைப் பற்றி எடுத்துரைத்தார், மூன்றாமாண்டு மாணவ பேச்சாளர் செல்வி எல். நிஷாந்தி ‘நூல் நூலகம் சமூகம்” என்னும் தலைப்பில் பேசினார். நூலகம் பேசுகிறது இதழின் நிர்வாகக்குழு உறுப்பினர் முனைவர் ஏ.சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

‘கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன்” சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘வாசிப்போம் வாருங்கள்” என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார், அதில் தமிழில் முதன் முதலாக வெளிவந்த பிரதாப முதலியார் சரித்திரம் முதல் இன்றைய ஊடக வாசிப்பு வரை ஒவ்வொன்றாக விவரித்தார்,

நூலகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு நூலகத்துக்கு என்றே ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தி, இணையவழியில் பங்கேற்பாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து, இறுதியாக வாசிப்பு மனிதனை வளர்க்கும், வாசித்தால் மட்டுமே பண்படுவோம, வாசித்தால் மட்டுமே புதிய புதிய கருத்துக்கள் உருவாகும் என்று வாசிப்பின் அவசியத்தை பங்கேற்பாளர்களுக்கு உணர்த்தி உரையை நிறைவு செய்தார். சாலீஸ் அமைப்பின் ஆலோசகர் முனைவர் எம்.மந்திராச்சலம், நன்றி கூறனார்.

இரண்டாம் நாளான 31.07.2020 வெள்ளிக்கிழமை அன்று ‘உலகை வசமாக்கும் வாசிப்பு” என்னும் தலைப்பில் சிறப்பு விருந்தினர் ‘பேசும் பூங்காற்று திருமதி.கவிதா ஜவஹர்” சொற்பொழிவு நிகழ்த்தினார். சாலிஸ் அமைப்பின் மூத்த ஆலோசகர் முனைவர் எஸ். சூரியநாராயணன் வரவேற்றார், கல்லூரியின் முதலாமாண்டு மாணவி, செல்வி ஜி. வாசுகி இணையவழி வாசகர் மாநாட்டைப் பற்றி எடுத்துரைத்தார், ‘மின்நூலின் உயிர்ப்புதன்மை’ என்னும் தலைப்பில் மூன்றாமாண்டு மாணவர் செல்வன் எஸ்.குருவசந்த் பேசினார். நூலகர், முனைவர் கே.கருணை ராகவன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். இறுதியாக சாலிஸ் அமைப்பின் துணைத்தலைவர் எஸ். மணிகண்டன் நன்றி கூறினார்.

நிறைவு நாளான 01.08.2020 சனிக்கிழமை அன்று ‘உடல் நலம் மற்றும் மன நலம” என்னும் தலைப்பில் சிறப்பு விருந்தினர் ‘சித்த மருத்துவர் கு.சிவராமன்” சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார். சாலீஸ் அமைப்பின் தலைவர் முனைவர் கே.இளவழகன் வரவேற்றார், மாணவர் நரேன் இணையவழி வாசகர் மாநாட்டை பற்றி எடுத்துரைக்க, மாணவர் செல்வன் ஸ்டீபன் சி.பில்லிகிரகாம் ‘கைப்பேசிக்குள் கல்வி” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்; பேராசிரியை முனைவர் எஸ். தமிழ்ச்செல்வி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். நூலகர் முனைவர் கே.கருணைராகவன் வாசகர் மாநாட்டு அறிக்கை சமர்ப்பிக்க, சாலீஸ் அமைப்பின் மூத்த ஆலோசகர்

முனைவர். எஸ். சுவாமி நாதன் நன்றி கூறினார். பேராசிரியர் ஜே.இ.ஜெயந்தி, மாணவி எல்.நிஷாந்தி, மாணவர் வைத்தியநாதன் ஆகியோர் இந்நிகழ்வினை வெகு சிறப்பாக தொகுத்து வழங்கினர்.

இம்மூன்று நாட்களும் தமிழகம் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் சுமார் 450-க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வளர்கள், படைப்பாளிகள், வாசக பெருமக்கள், நூலகர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், ஊடகம் மற்றும் பத்திரிக்கைத்துறை நண்பர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என பல்வேறு தரப்பட்ட பிரிவினரும் பங்கேற்று சிறப்பித்துத்திருந்தனர்.

கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர். அருணாச்சலம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் முனைவர் எஸ்.சண்முகவேல், கல்லூரி முதல்வர் முனைவர் கே.காளிதாஸ முருகவேல், சாலீஸ் அமைப்பின் நிறுவன தலைவர் முனைவர் ஏ.ஹரிஹரன் ஆகியோர்களின் வழிகாட்டுதல்களின்படி கல்லூரி நூலகர் முனைவர் கே.கருணைராகவன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here