கோவில்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ரத்ததான கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

0
20
WhatsApp Image 2019-06-27 at 6.35.12 PM

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொது மருத்துவராக சி.பிரபாகர் பணியாற்றி வந்தார். இவரை தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டித்தும், இடமாறுதலை ரத்து செய்யக்கோரியும் கோவில்பட்டியில் நேற்று ரத்ததான கழகங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு புத்துயிர் ரத்ததான கழக தலைவர் க.தமிழரசன் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்ததான கழகத்தை சேர்ந்த எம்.எஸ்.முத்து, பகத்சிங் ரத்ததான கழகத்தை சேர்ந்த எம்.ராஜபாண்டி, மா.காளிதாஸ், பிரபாகரன் குருதி கொடையாளர் சங்கத்தை சேர்ந்த மா.மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here