கொலை வழக்கில் தாய், மகனுக்கு இரட்டை ஆயுள்! தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

0
286
news

தூத்துக்குடியில் கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தாய், மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம்(வயது 50). கூலித் தொழிலாளியான, இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 55). இவருக்கும், சண்முகத்தின் மனைவிக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாம்.

இந்நிலையில் சண்முகம், முருகேசனை கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் அரிவாளால் தாக்கியுள்ளாராம். இதுதொடர்பாக முருகேசன் அளித்த புகாரின்பேரில் சண்முகத்தின் மீது கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதற்கிடையே, ஜாமீனில் வெளியே வந்த சண்முகம், கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் வீட்டில் தனியாக படுத்திருந்தபோது, எரித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முருகேசனும், அவரது தாய் செல்வி என்பரும் சேர்ந்து சண்முகத்தை எரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2பேரையும் கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் எண் 2ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கெளதமன் குற்றம் சாட்டப்பட்ட செல்வி, மற்றும் அவரது மகன் முருகேசன் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here