சாயர்புரத்தில் ஊர்வசி செல்வராஜ் நினைவு இலவச பொறியியல் கல்வி வழங்கும் விழா

0
57
uorvasi selvaraj news

ஏரல், ஆக.06-

மறைந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி செல்வராஜ் நினைவு இலவச பொறியியல் கல்வி வழங்கும் விழா சாயர்புரத்தில் உள்ள ஊர்வசி செல்வராஜ் நினைவு இலவச கல்வி மையத்தில் காணொளி காட்சி மூலமாக நடந்தது.

மறைந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி செல்வராஜ் கடந்த 2006ஆம் ஆண்டு ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மேற்படிப்பு படிக்க இயலாத ஏழை மாணவர்களுக்கு சென்னையில் உள்ள அவரது கிங்ஸ் இன்ஞினியரிங் கல்லூரியில் முற்றிலும் இலவச கல்வி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அவரது மறைவிற்கு பின் அவரது மகனும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளருமான ஊர்வசி அமிர்தராஜ் அத்திட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். இதன்படி 15வது ஆண்டு இலவச பொறியியல் கல்வி வழங்கும் விழா சாயர்புரத்தில் நடந்தது. இந் நிகழ்ச்சியில் சென்னை ராஜம் குழுமத்தின் இயக்குநரும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளருமான ஊர்வசி அமிர்தராஜ் சென்னையில் இருந்தபடியே காணொளி காட்சி மூலமாக மாணவ மாணவியருடன் கலந்துரையாடி இலவச பொறியல் கல்விக்கான சேர்க்கை உத்தரவினை வழங்கினார். இதில் 10மாணவர்களுக்கு முற்றிலும் இலவச பொறியியல் கல்வி சேர்க்கை உத்தரவினை வழங்கினார்.

மேலும், கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கு கல்வி, விடுதி, மற்றும் உணவு ஆகியவற்றில் பாதிக்கும் குறைவான கட்டணத்தில் சேர்க்கை உத்தரவினை வழங்கினார். இவ் விழாவிற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமன் தலைமை வகித்தார். ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பொன்துரை வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் விழாவில் காங்கிரஸ் வட்டார தலைவர்கள் ஸ்ரீவைகுண்டம் நல்லகண்,

திருச்செந்தூர் சற்குரு மாவட்ட இளைஞர் தலைவர் ஜெயசீலன்துரை நகர தலைவர்கள் ஆத்தூர் பாலசிங், பெருங்குளம் மூக்காண்டி, ஒ.பி.சி பிரிவு தெற்கு மாவட்ட தலைவர் தாசன், மாவட்ட பொது செயலாளர் சீனி ராஜேந்திரன், இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் இசைசங்கர் , மதிசேகரன், காங்கிரஸ் எடிசன், தர்மர், முன்னாள் நகர தலைவர் சொரிமுத்து பிரதாபன், ஐ.என்.டி.யூ.சி சந்திரன், தூத்துக்குடி ஊடகபிரிவு பொறுப்பாளர் முத்துமணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here