கல்லாப்பெட்டியில் கை வைக்கல… வெங்காயத்தை திருடிய திருடர்கள்.. கடைக்காரர் கதறல்

0
261
venkayam

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் காய்கறி கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணத்தை திருடாமல் வெங்காயத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. சின்ன வெங்காயத்தின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.

நிறைய இடங்களில் சின்ன வெங்காயம் கிடைப்பது இல்லை. இந்நிலையில் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கனமழை பெய்த காரணத்தால் கர்நாடகம், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.

அரசு வெங்காய தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் தற்போதைய நிலையில் பொங்கல் பிறக்கும் வரை வெங்காய விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பு இல்லை என்று சொல்கிறார்கள்.

இந்நிலையில் மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் காய்கறி கடை ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் வெங்காய மூட்டைகளை திருடிச் சென்றுள்ளார்கள்.. அக்சயா தாஸ் என்பவருக்கு சொந்தமான சுடஹட்டா பகுதியில் காய்கறிகளை மொத்தமாக விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல் கடையைத் திறக்க சென்ற போது, கடையில் பூட்டை திருடர்கள் கொள்ளையடித்தை கண்டு அக்சயா தாஸ் அதிர்ச்சி அடைந்தார். நேராக கல்லாப்பெட்டியை திறந்த பார்த்த போது அதில் உள்ள பணம் அப்படியே இருந்திருக்கிறது.

ஆனால் கடையில் இருந்த ரூ.50ஆயிரம் மதிப்பிலான வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடியிருக்கிறார்கள். மேலும் இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றையும் அதிக அளவு திருடியிருக்கிறார்கள். இதனால் மிகுந்த வேதனை அடைந்த கடைக்காரர் தாஸ் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here