இலங்கை பாராளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நிறைவு – 70 சதவீதம் வாக்குபதிவு

0
134
srilangka

ஒன்பதாவது பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற பொதுத் தேர்தலின் வாக்களிப்பு இன்று மாலை நிறைவடைந்தது. இன்றைய தேர்தல் வாக்களிப்பு வீதம் 70 சதவீதமாக அமைந்திருந்ததாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

நாளை பிற்பகல் 3.00 மணியளவில் முதலாவது பெறுபேற்றை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும், இறுதி பெறுபேறு நாளை நள்ளிரவு அளவில் வழங்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மாவட்ட ரீதியில் பதிவாகியுள்ள வாக்களிப்பு வீதங்கள் பின்வருமாறு :- .

கொழும்பு மாவட்டம்- 67%, களுத்துறை மாவட்டம்- 70% ,கண்டி மாவட்டம்- 72% ,மாத்தளை மாவட்டம்- 72%, நுவரெலியா மாவட்டம்- 75%, காலி மாவட்டம் – 70%, மாத்தறை மாவட்டம்- 71%, ஹம்பாந்தோட்டை மாவட்டம்- 76%, யாழ்ப்பாணம் மாவட்டம்- 57%, வன்னி மாவட்டம்- 73%, மட்டக்களப்பு மாவட்டம்- 76%, திஹாமடுல்ல மாவட்டம்- 73%, திருகோணமலை மாவட்டம்- 73%, குருநாகல் மாவட்டம்- 60%, புத்தளம் மாவட்டம்- 64%, அனுராதபுரம் மாவட்டம்- 70%, பொலன்னறுவை மாவட்டம்- 72%, பதுளை மாவட்டம்- 74%, மொனராகலை மாவட்டம்- 75%, இரத்தினபுரி மாவட்டம்- 71%, கேகாலை மாவட்டம்- 71%, கிளிநொச்சி மாவட்டம்- 71.52%, மன்னார் மாவட்டம்- 79.49%, வவுனியா மாவட்டம்- 74%, முல்லைத்தீவு மாவட்டம்- 76.25%, கம்பஹா மாவட்டம்- 63%

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here