அயோத்தில் ராமர் கோவில் – கோவில்பட்டியில் பாஜகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

0
67
bjp kvp

அயோத்தியில் ஸ்ரீ இராமபிரானுக்கு கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. பாரத பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இதனை கொண்டாடும் வகையில் கோவில்பட்டியில் நகர பாஜகவினர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். பாஜக நகர தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டியல் அணி மாநில செயலாளர் சிவந்தி நாராயணன் கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கினார்.

உடன் நகர பொது செயலாளர் முனியராஜ், சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் உமா செல்வி, மாவட்ட செயலாளர் கோமதி, பாஜக நிர்வாகி கந்தவேல் நகர செயலாளர் அருணசலம், முன்னாள் நகர இளைஞர் அணி துணை தலைவர் குரு தேவன் மற்றும் கல்யாண சுந்தரம், மயில்ராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here