அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் – சாத்தான்குளம் பகுதியில் இந்து முன்னணி, பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

0
142
sathankulam bjp

சாத்தான்குளம், ஆக. 5:

அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்ட பூமி பூஜை நடைபெற்றதையொட்டி சாத்தான்குளம் பகுதியில் இந்து முன்னணியினர், பாஜகவினர் இனிப்பு வழங்கினர். கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அயோத்தியில் ஸ்ரீராமர்கோயில் கட்ட பூமி பூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதனை வரவேற்று சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் இந்து முன்னணியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதையொட்டி அயோத்தி சென்று திரும்பிய இந்து முன்னணி மாநில பொதுச் செயலர் டாக்டர் அரசுராஜா கௌரவிக்கப்பட்டார்.

இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் வி.எஸ். முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னத்துரை, தூத்துக்குடிமாவட்ட அன்னையர் முன்னணி பொறுப்பாளர் ஆர். சுந்தரவேல், பாஜக மாவட்ட இளைஞரணி செயலர் ஆர்.எஸ். ராஜகோபால், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ஆழ்வார், முன்னாள் பாஜக ஒன்றிய தலைவர் வெங்கடாச்சலம், மாவட்ட பாஜக அமைப்பு சாரா செயலர் ஏ. பரமசிவன், இந்து அன்னையர் முன்னணி ஒன்றிய பொருளாளர் எஸ். சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம் தச்சமொழி ஆலமர அருள்மிகு விநாயகர் கோயிலில் ஒன்றிய பாஜக சார்பில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் ஒன்றிய பாஜக பொதுச் செயலர் ஏ. ராம்மோகன், ஒன்றிய துணைத் தலைவர்கள் கோ. ஜெயசுந்தர்ராஜ், சங்கரகுமார், ஒன்றிய செயலர் மணிகண்டன், வர்த்தக மற்றும் பொருளாதார பிரிவு ஒன்றிய தலைவர் தினகரன், அமைப்புச்சாரா ஒன்றிய தலைவர் ராஜன், துணைத் தலைவர் பழனிவேல்,ராஜவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளையில் இந்து முண்ணணி சார்பாக ஸ்ரீராமர் உருவ படத்தை வைத்து பூஜை நடத்தப்பட்டது. இதில் இந்து முண்ணனி மாநில பொதுசெயலர் டாக்டர் அரசுராஜா, மாவட்ட அன்னையர் முன்னணி பொறு்பாளர் ஆர். சுந்தர வேல், மாவட்ட பாஜகஇளைஞரணி செயலர் ஆர். எஸ். ராஜகோபால்,சாத்தான்குளம் ஒன்றிய பொருளாளர் தீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையார்புரம் இந்துமுன்னணி கிளை கமிட்டி சார்பில் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில்ஸ்ரீ ராமபிரானுடைய உருவ படத்திற்கு மாலை அணிவித்து அலங்காரம் செய்து பஜனையோடு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் சாத்தான்குளம் ஒன்றிய செயலர் சிவமுருகன், சுரேஷ், நெல்லை கோட்ட செயலர் பெ. சக்திவேலன், ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவர் இன்பஅருண் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here