சாத்தான்குளம் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு இணைய வகுப்புகள் தொடக்கம்

0
265
student news

சாத்தான்குளம், ஆக. 5:

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மாணவர்களுக்கு இணைய தளம் மூலம் வகுப்புகள் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் ரா. சின்னத்தாய் விடுத்துள்ள அறிக்கை.

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தமிழக அரசின் உயர் கல்வித்துறை அறிவுறுத்தலின் பேரில் கடந்த 3ஆம்தேதி முதல் மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து இளங்கலை இரண்டாண்டு, மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு இணைய வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

கல்லூரி வேளை நேரமாகிய காலை 9.30மணி முதல் மாலை 4.30 மணி வரை பேராசிரியர்களால் வகுப்புகள் நடத்தப்படுவதோடு, புலனக்குழுவில் பாடக்குறிப்புகளும் அனுப்பபடுகிறது. அனைத்து மாணவிகளும் , தவறாமல் இணைய வகுப்புகளில் கலந்து கொண்¢டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here