சாத்தான்குளம், ஆக. 5.
பண்டாரபுரத்தில் திடீரென மின் வெட்டு ஏற்பட்டது. பொதுமக்கள் புகாரினை அடுத்து சீரமைக்கப்பட்டது.
சாத்தான்குளம் ஒன்றியம் பண்டாரபுரத்தில் 500க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாத்தான்குளம் மின்வாரியம் மூலம் மின்சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3ஆம் தேதி மாலை 6மணி அளவில் பண்டாரபுரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை மின்தடை சீரமைக்கப்படவில்லை.
இதனால் கிராம மக்கள் சிரமம் அடைந்தனர். இதையடுத்து கிராமமக்கள் ஊராட்சித் தலைவர் உதயம் பாலசிங், ஒன்றியக்குழு உறுப்பினர் குருசாமி ஆகியோர் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர், தூத்துக்குடி மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து மின் ஊழியர்கள் விரைந்து வந்து பண்டாரபுரத்தில் மின்பழுதை சீரமைத்து 4ஆம்தேதி இரவு 9மணி அளவில் மின் சப்ளை வழங்கிட நடவடிக்கை எடுத்தனர்.