மரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் குடும்பத்திற்கு சக வீரர்கள் 1 லட்சம் நிதிவுதவி – வாட்ஸ் அப் மூலம் நிதி திரட்டினர்

0
222
crbf

நாசரேத், ஆக.06:தூத்துக்குடி மாவட்டம் பேரூர் கிராமத்தைச் சேர்ந்த சி.ஆர். பி.எப் வீரர் அமிர்தசுந்தர். கடந்த 2003 ல் பணியில் சேர்ந்தார்.அவர் ஒடிசாவில் பணிபுரிந்து வந்தபோது கடந்த ஜூன் 13 ஆம் தேதி உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.

அவரது குடும்பத்திற்கு எதாவது உதவ வேண்டும் என அவருடன் பணியில் இருந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் விரும்பினர். வாட்ஸ் அப் குரூப்பின் மூலம் நிதி திரட்டினர். ஒரு லட்சம் நிதியை திரட்டிய அவர்கள், அமிர்தசுந்தரின் மகள் பெயரில் டெபாசிட் செய்து அதற்கான பத்திரத்தை பெற்றோர்களிடம் வழங்கினர். மேலும் அவரது குழந்தைகளுக்கு புத்தாடைகளையும் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here