ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் ஊதியம் பெறாமல் துப்புறவு பணியாளர்கள் தவிப்பு பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை

0
234
srvai

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் ஒப்பந்தப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் துப்புறவு பணியாளர்களுக்கு பணிக்கான ஊதியம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி 18வார்டு பகுதிகளை உள்ளடக்கியதாகும். இங்கு, நவத்திருப்பதிகளில் முதல் கோயிலான கள்ளபிரான் கோயில், நவகைலாயக் கோயில்களில் ஒன்றான கைலாசநாதர் கோயில், 420ஆண்டுகள் பழமை வாய்ந்த குருசு கோயில் உள்ளிட்ட முக்கிய ஸ்தலங்கள் உள்ளன.

இதனால், சுற்றுலா பயணிகளும் திரளான பக்தர்களும் தினமும் ஸ்ரீவைகுண்டத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதையும் ஒப்பந்தப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் துப்புறவு பணியாளர்கள் தினமும் சுத்தம் செய்து குப்பைகள் சேராத வண்ணம் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் துப்புறவு பணியாளர்கள் கடந்த 11ஆண்டுகளாக ரூ.110 மட்டும் ஒப்பந்த முறையில் ஊதியம் பெற்று வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் தற்பொழுது பணிபுரியும் 20க்கும் மேற்பட்ட துப்புறவு பணியாளர்களும் ரூ.300 ஊதியமாக பெற்று வரும் நிலையில் இந்த மாதம் பணிக்கான ஊதியம் துப்பறவு பணியாளர்கக்கு வழங்கப்படவில்லை.

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வில் தங்களது வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் துப்புறவு பணியாளர்கள் கடனாளிகளாகவே உள்ளனர்.

அவர்களது ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும். மழைக் காலங்களிலும் தங்களது உடல்நலனை பற்றி கவலைப்படாமல் துப்புறவு பணியினை மேற்கொண்டு வரும் துப்புறவு பணியாளர்களின் பணியினை நிரத்தரம் செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here