தன்னார்வலர் அந்தோணிராஜ் தலைமையில் கபசுரக்குடிநீர் 3 நாள்கள் வழங்கல்

0
162
nazareth

நாசரேத்,ஆக.06:சாத்தான்குளம் வட்டம் , பிடாநேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களான டி கே சி நகர், சமத்துவபுரம், பிடாநேரி, தைலாபுரம் ஆகிய ஊர்களில் தன்னார்வலர் அந்தோணிராஜ் (மாற்றுத்திறனாளி ) முன்னிலையில் “கப சுரக் குடிநீர்” மற்றும் “சத்து மாத்திரைகள்” சுமார் 1500 பேருக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வினை மெஞ்ஞானபுரம் காவல்துறை ஆய்வாளர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.பிடாநேரி ஊராட்சி தலைவர் சலேட் மெர்சி, டிகேசி நகர் வார்டு உறுப்பினர் முனிய செல்வி ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு கப சுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை டி கே சி நகரை சேர்ந்த பாஸ்டர். எபனேசர் மற்றும் பாலன் ஆகியோர் செய்து இருந்தனர். முத்நாள் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியால் துவக்கி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here