அயோத்தியில் ராமர் கோயில் – சாத்தான்குளத்தில் வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி மகிழ்ந்த மக்கள்!

0
114
sathankulam

சாத்தான்குளம் ஆக.6:

சாத்தான்குளம் அருகே அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வரவேற்பு தெரிவித்து வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி மகிழ்ச்சியை தெரிவித்த கிராம மக்கள்.

ராமர் பிறந்த இடமான அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டுவதற்கு இன்று காலை பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது.இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வரவேற்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மணிநகர் காந்திபுரி பகுதியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியதை வரவேற்று கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கோலமிட்டு அதில் அகல் விளக்கு ஏற்றி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

முன்னதாக அங்குள்ள மாரியம்மன் கோவிலில் பொங்கலிட்டு விளக்கு ஏற்றி சிறப்பு பூஜையும் செய்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் காந்தி புரி ராமச்சந்திரன் பிஜேபி மாவட்ட துணைத்தலைவர் எஸ்சி அணி .சரவணன் ஒன்றிய தலைவர் எஸ்சி அணி .மற்றும் கார்த்திக் ஊர் தலைவர். நாதன், ரமேஷ், முருகேசபாண்டியன், கலந்துகொண்டனர்.

அயோத்தி ஸ்ரீராமபிரான் மஹாஆலயம் பூமி பூஜையை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் (தென்தமிழ்நாடு) சார்பாக இனிப்பு வழங்கப்பட்டது! விழாவில் மாவட்ட செயலாளர் M.மாணிக்கராஜா, ஒன்றிய செயலாளர் S.தனபாலன், மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆனந்த், சந்திரகுமார், தச்சன்விளை T.குட்டியன், பாலசுந்தரம், ஊராட்சி முன்னாள் உறுப்பினர் சுயம்பு, பனைவிளை வசந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here