தேங்கிய நீரில் குளியல் போட்ட சிட்டுக்குருவிகள்

0
92
sittukuruvi

சாத்தான்குளம் ஆக.6:

சாத்தான்குளம் அருகே தேங்கிய நீரில் குருவிகள் குவித்தது ரசிக்க வைத்தது.

கொரோனா ஊரடங்கால் மக்கள் வீட்டில் முடங்கும் சூழலில் தள்ளப்பட்டுள்ளனர்.ஆனால் மிருகங்களும் பறவைகளும் இஷ்டம்போல்உலா வருகிறது. கொரொனா மனிதர்களிடம் உண்டாக்கி வரும் உயிரிழப்பால் அச்சமும் பரவி வருகிறது.அவைகளுக்கு கொரோனா அச்சம் இல்லை.

இந்த சூழ்நிலையில் சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூரில் குடிநீர் குழாயடியில் பெண்கள் தண்ணீர் சிதறி தண்ணீர் சிறிதளவு தேங்கி காணப்பட்டது.அதில் இன்று காலை ஆறுக்கு மேற்ப்பட்ட சிட்டுக்குருவிகள் ஒவ்வொன்றாக வரிசையாக குளியல் போட்டது.இது பார்ப்போரை கவர்ந்து ரசிக்க வைத்தது.

இதன் மூலம் கொரோனா தடுப்பு முடிந்து பயமில்லாமல் சுதந்திரமாக பயணிப்பது எப்போது என மக்களிடம் வினா எழுந்தது போல் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here