ரூ.345 கோடியில் புதிய திட்டங்கள் – அடிக்கல் நாட்ட, தொடங்கி வைக்க தமிழக முதல்வர் நாளை நெல்லை வருகிறார்

0
548
cm pazhanichami

நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு 345 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நெல்லை வருகிறார்.

நெல்லைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை (7-ம் தேதி) வருகிறார். 9:30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் 2-வது தளத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர், தொழில் முனைவோர், விவசாயிகளுடன் கலந்து ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து மூன்றாவது தளத்தில் பல்வேறு திட்டப் பணிகளையும் முதல்வர் துவக்கி வைக்கிறார்.

மதியம் 2 மணிக்கு வண்ணார்பேட்டை சுற்றுலா பயணியர் விடுதியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் வருகையை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நெல்லைக்கு வரும் தமிழக முதல்வர் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார். நெல்லை மாவட்டத்தில் ரூ. 185.41 லட்சத்தில் கட்டப்பட்ட நெல்லை ஆர்டிஓ அலுவலகம், ரூ..325.59 லட்சத்தில் கட்டப்பட்ட சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டிட, ஆய்வக, கழிப்பறை வசதிகள். ரூ.165 9.81 லட்சத்தில் கட்டப்பட்ட நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி வசதிகள்,

ரூ.137.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பாளை., காந்திமதி மகளிர் மேல்நிலைப்பள்ளி புதிய வகுப்பறை கட்டடம், தென்கரை மகாராஜராஜேஸ்வரர் கோயில் அன்னதான கூடம், சேரன்மகாதேவி ராமநாதசுவாமி கோவில் செயல் அலுவலர் கட்டணம், சேரன்மகாதேவி ஆய்வர் அலுவலக கட்டடம் ஆகியவற்றை தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார்.

திடியூர், வெள்ளாங்குளம், ஆனைக்குளம், நாங்குநேரி, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, அச்சம்பாடு புதூர், நாங்குநேரி ரெட்டார்குளம் பகுதிகளில் சாலை வசதிகள், புதிய அலுவலகக் கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைக்கிறார். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் ரூபாய் 1,245. 66 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டங்களை முதல்வர் திறந்து வைக்கிறார்.

தென்காசி மாவட்டத்தில் ரூ.125 லட்சத்தில் கட்டப்பட்ட தென்காசி ஆர்டிஓ ஆபீஸ் முதல் தளத்தில் தற்காலிக கலெக்டர் அலுவலக கட்டடம், ரூ. 215.60 லட்சத்தில் கட்டப்பட்ட கோட்டை மலை ஆற்றின் குறுக்கே அச்சமின்றி குளம் கால்வாய் பிரியும் இடத்தில் கட்டப்பட்ட படுக்கை அணை. கடையநல்லூர், ஊர்மேலழகியான், பாவூர்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை மேம்பாட்டுத் திட்டங்களையும் முதல்வர் துவக்கி வைக்கிறார்.

ரூபாய் 23.50 லட்சத்தில் கட்டப்பட்ட செங்கோட்டை திருமலை குமாரசாமி கோயில் பொருட்கள் பாதுகாப்பு கட்டடம், குற்றாலம் திருமலை குமாரசாமி தேவதானம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் உணவருந்தும் கட்டட வசதிகளையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார் இம்மாவட்டத்தில் மொத்தம் ரூபாய் 1,436.09 லட்சத்தில் பணிகளை முதல்வர் துவக்கி வைக்கிறார்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் ரூபாய் 2,681.95 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திட்டங்களை துவக்கி வைப்பதோடு நெல்லை மாவட்டத்தில் ரூ.27,525 லட்சம், தென்காசி மாவட்டத்தில் ரூபாய்.4, 304 லட்சத்தில் புதிய திட்டங்களுக்கும் தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here