தாமரை கட்சி பொட்டுக்காரரை இழுக்க முடியவில்லையாம்.. சூர்ய கட்சி தலைமைக்கு..

0
162
bjp - dmk

சூரிய கட்சியின் சிட்டிங் எம்எல்ஏ தாமரை கட்சியில் இணைய இருப்பதையும் ,தாமரை தலைமை அலுவலகத்திற்கு சென்றதை சூரிய கட்சித் தலைமையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் தலைவர் பலவீனமானவர் என பலர் விமர்சனம் செய்து வரும் சூழ்நிலையில் சூர்ய கட்சி வரலாற்றில் இல்லாத விதமாக சிட்டிங் எம்எல்ஏ அடுத்த கட்சி பக்கம் சாய்ந்தது, மேலும் சூர்ய கட்சியின் தலைமையை அசைத்து பார்க்கும் செயல் என்றே அக்கட்சி கருதுகிறது.

தாமரை கட்சியின் இச்செயலுக்கு பதிலடி கொடுக்க, சூர்ய கட்சி தலைவர் ஸ்டாலினை வாழ்த்தி பேசியதால் தாமரை கட்சி தொண்டர்களின் விமர்சனத்தை பெற்று அதிலிருந்து வெளியேறிய அரச குமாரர் ஒருவர் மூலம் காய்களை நகர்த்தியிருக்கிறது சூர்ய கட்சி. அரச குமாரர் சொன்னால் கேட்பார் தாமரை கட்சியின் பொட்டுக்காரர் என சூர்ய கட்சி நம்பியிருக்கிறது.

அந்த நம்பிக்கையில்தான் சூர்ய கட்சி தரப்பு,தாமரை கட்சி பொட்டுக்காரரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அதிருப்தியில் இருந்தாலும் அப்படி இப்படி என சமாதான சடங்குகள் எல்லாம் நடந்து முடிந்துவிட்ட நிலையில், ‘ முதலில் நான் தாமரை கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு கொடுத்தது மட்டுமல்லாமல், நான் துணை தலைவராகவும் இருக்கிறேன். நான் அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவல் 100 % தவறு’’ என கூறியிருக்கிறார் பட்டுனு பதில் சொல்லியிருக்கிறார் தென் பாண்டி பொட்டுக்காரர்.

வாருங்கள் எம்எல்ஏ சீட் , அமைச்சர் பதவி தருகிறோம், நீங்கள் ஓகே சொன்னால் இப்போதே நேரடியாக தலைமையை சந்திக்கலாம் என அழுத்தம் கொடுத்திருக்கிறார் அரச குமாரார். அதற்கு பொட்டுக்காரர், ‘’நீங்கள் தாமரை கட்சியிலிருந்து முன்னாள் எம்எல்ஏ வை உங்களது கட்சியில் இணைத்ததற்கு பதிலடியாகதான் உங்கள் சிட்டிங் எம்எல்ஏவை தாமரை பக்கம் இழுக்கிறது. மேலும் நீங்கள் தாமரை கட்சியிலிருந்து ஆட்களை இழுக்க நினைத்தால், போட்டியாக உங்களது கட்சியைச் சேர்ந்த பல நபர்கள் தாமரை கட்சியில் இணைவார்கள். முதலில் உங்களது கட்சி உறுப்பினர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளுங்கள்’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார் பொட்டுக்காரர்.

அவர் இப்படி பேசியதற்கு காரணம் இல்லாமல் இல்லை. முதலில் தாமரை கட்சியிலிருந்து பொட்டுக்காரர் வெளியேற போகிறார் என்கிற தகவலை ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் பரப்பியது சூர்யகட்சியின் வேலையாகத்தான் இருக்கும் என பொட்டுக்காரர் சந்தேகப்படுகிறார். அதனால்தான் இப்படி பொட்டுன்னு பதில் சொல்லிபுட்டாராம் பொட்டுக்காரர். இதனால் இழுவை அச்சுறுத்தல் மூலம் தாமரை வகையாறாவை மிரட்டலாம் என நினைத்திருந்த சூர்ய கட்சி தலைமைக்கு ஏமாற்றம்தாம்மிஞ்சியதாம்.

அடுத்ததாக சூர்ய கட்சியிலிருந்து ஒரு கல்வியாளர், மக்கள் பிரதிநிதி தாமரை பக்கம் சாய்கிறாராம்.அதற்கான ஏற்பாடுகள் விரைந்து நடந்து வருகிறது என்கிறார்கள்.

வளர்பிறையும் தேய்பிறையும் அவ்வப்போது வந்து வந்து போவது வழக்கம்தான். இதற்கிடையே முதல்வர் முன்னிலையில் சிலர் இலைக் கட்சியில் இணையும் சடங்கும் நடக்கலாம் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here