நாசரேத், ஆக.06: நாசரேத்- பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத் திருவிழாவில் கொரோனா தொற்று பரவலால் தமிழகத்தில் அறிவிக்கப் பட்டுள்ள ஊரடங்கினை முன்னிட்டு பங்கு மக்களின்றி கொடியேற்றம் நடந்தது.

நாசரேத்- பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத் திருவிழா துவக்கமாக இன்று மாலை கொரோ னா ஊரடங்கினை முன்னிட்டு பங்கு மக்களின்றி பங்குத்தந்தை அந்தோணி இருதய தோமாஸ் தலைமையில் தைலாபுரம் பங்குத்தந்தை இருதயராஜ் கொடியேற்றினார்.

முன்னதாக சிறப்பு ஜெபமாலை நடை பெற்றது.கொடியேற்றத்தில் மறை மாவட்ட தந்தை லியோ ஜெயசீலன், பிரகாசபுரம் சி.எஸ்.ஐ. பங்குத்தந்தை ஜெபவீரன் உள்பட பங்கு மக்கள் ஒரு சிலர் கலந்து கொண்டனர்.