நாசரேத்தில் ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை!

0
334
nazareth

நாசரேத்,நவ.28:நாசரேத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கனோன் ஆர் தர் மர்காசிஸ் சபைமன்ற அளவில் ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் வைத்து நடைபெற்றது.

நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நாசரேத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கனோன் ஆர்தர் மர்காசிஸ் சபை மன்ற அளவில் ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் கீதஆராதனை நடைபெற்றது.கனோன் ஆர்தர் மர்காசிஸ் சபைமன்றத் தலைவரும், நாசரேத் தூய யோவான் பேராலயத் தலைமை குருவானவருமான எட்வின்ஜெபராஜ் தலைமைவகித்து ஜெபித்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல ஆண்கள் ஐக்கியசங்க இயக்குனர் ஜெபவாசகன் முன்னிலை வகித்தார்.ஆராதனையில் தங்கத்துரை,ராஜேந்திரன்,ஜெபசிங், ஜெயபால், செல்வராஜ், செல்வின் ஞானக்கண் ஆகியோர் வேதபாடம் வாசித்தனர்.

மூக்குப்பீறி சேகரகுருவானவர் என்.எஸ்.ஜெரேமியா கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார்.ஆராதனையில் சேகரங்கள், சபைகள் சார்பில் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடினர். ஆராதனையில் ஓய்வுபெற்ற குருவானவர்கள் டேனியல்ராஜ், பிர காசபுரம் சேகரகுரு ஜெபவீரன் சபை ஊழியர்கள் ரொனால்டு,ஜெபஸ்டின், ஜெபராஜ், ஸ்டான்லி ஜாண்சன்துரை, ஏசா வேதராஜ், ஸ்டீபன், சர்ச்சில், சேகர பொருளாளர் மர்காசிஸ் தேவதாஸ்,திருமண்டலபெருமன்ற உறுப்பினர்கள் ஆண்ட்ரூஸ் ராக்லண்டு, செல்வின்,சேகரகமிட்டி உறுப்பினர்கள் உள்படபலர் கலந்துகொண்டனர்.

ஆராதனை யில் மாற்றுத்திறனாளியான மாடசாமிக்கு கிறிஸ்துமஸ்புத்தாடையை கனோன்ஆர்தர் மர்காசிஸ் சபைமன்றத் தலைவரும், நாசரேத் தூய யோவான் பேராலயத் தலைமை குருவானவருமான எட்வின்ஜெபராஜ் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here