கோவில்பட்டி அருகே தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’நடிகர் சங்க தேர்தல் நடைபெற்ற போது ஒற்றுமையாக இருந்து தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்,தேர்தல் இல்லாமல் ஒருமித்த கருத்துடன் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க கோரிக்கை வைத்தோம்.
அதுதான் எங்க விருப்பமாக இருந்தது,அதே தான் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பொருந்தும்,நடிகர் சங்க தேர்தல் நடைபெற்ற போது நீதிமன்றம் சென்றது போல தயாரிப்பாளர் சங்கத்தினை சேர்ந்தவர்களும் நீதிமன்றம் சென்றுள்ளனர்.நடிகர் சங்கமாக இருந்தாலும், தயாரிப்பாளர் சங்கத்தினராக இருந்தாலும் ஒருங்கிணைந்து பேசி பிரச்சினைகளை சுமூகமாக முடிக்க தயராக இருந்தால் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
தேவை ஏற்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண அரசு வழி வகுக்கும். நடிகர் எஸ்.வி.சேகர் தற்போது அதிமுகவில் இல்லை.. அவர் நன்றி மறந்தவர், அவருக்கு அடையாளம் தந்தது அதிமுக தான்,நன்றி மறந்தவர்க்கு பதில் சொல்வது சரியாக இருக்காது’’ என்றார்